பாட்டு சூட்டிங்கிற்கு பாரீன் ‌போவது அவசியமா?


Is it apt to shoot Songs in foreign location
பாடல் காட்சிகளை படமாக்குவதற்காக பாரீன் போகும் கலாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. கிராமத்து சப்ஜெக்ட் படமாக இருந்தாலும் கனவு பாடலை உருவாக்கி, அதை வெளிநாட்டில் படமாக்குவார்கள். படம் ஆரம்பிக்கும்போது பாவாடை - தாவணியில் வரும் நாயகி கனவுப்பாட்டில் பாரீனில் குட்டைப்பாவாடை அணிந்து குத்தாட்டம் போடுவார். இப்படி பாட்டு சூட்டிங்கிற்கு பாரீன் போவது அவசியமா? என்ற பட்டிமன்றமும் கோடம்பாக்கத்தில் அவ்வப்போது நடப்பதுண்டு. இதுபற்றி ஆதிக்கம் பட டைரக்டர் அனிஷ் அளித்துள்ள பேட்டியில், பாடல் காட்சிகளை படமாக்குவதற்கு வெளிநாடுகளுக்கு போவதை தவறு ‌என சொல்ல முடியாது. ஒரு படத்தின் வெற்றிக்கு கதை எப்படி முக்கியமோ... அதேப்போல லொகேஷன்களும் முக்கியம்தான். நம்மூரில் இருக்கும் சாதாரண ரசிகனால் அமெரிக்காவுக்கோ, சிங்கப்பூருக்கோ, லண்டனுக்கோ சென்று வர முடியாது. ஆனால் சினிமா மூலம் அவர்களும் வெளிநாடுகளை சுற்றிப் பார்க்கிறார்கள். அங்குள்ள மக்களின் கலாச்சாரம், அங்குள்ள சாலை விதிமுறைகளை சினிமா காட்சிகள் மூலம் தெரிந்து கொள்கிறார்கள். நம் ஊரில் சிக்னலை மதிக்காமல் மின்னல் வேகத்தில் பறக்கும் ஆசாமிகள், சினிமாக்களில் வரும் வெளிநாட்டு காட்சிகளில் அங்குள்ளவர்கள் எப்படி டிராபிக் ரூல்சை பின்பற்றுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். இது எத்தனையோ படங்களில் காட்டப்பட்டிருக்கிறது. (ஆனாலும் நம்ம மக்கள் திருந்த மாட்டேங்கிறாங்களே!) மெகா பட்ஜெட் படம் என்ற இமேஜூக்காகவும் வெளிநாடு செல்கிறோம். நான் இயக்கி வரும் ஆதிக்கம் படத்தில் இடம்பெறவிருக்கும் 2 பாடல் காட்சிகளை படமாக்க விரைவில் வெளிநாடு செல்லப் போகிறோம், என்று கூறியுள்ளார்.

23 வயதே ஆகும் டைரக்டர் அனிஷ் இப்போது தயாரித்து, இயக்கி வரும் ஆதிக்கம் படத்தில் விவின் என்ற புதுமுகம் நாயகனாகவும், மேகாநாயர் நாயகியாகவும் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க சென்னை நகர சந்து பொந்துகளில் தத்ரூபமாக காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருக்கும் அனிஷ் சினிமாவின் வெற்றிக்கு பாரீன் லொகேஷன்களும் கண்டிப்பாக உதவும் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்.

வாசகர்களே... பாட்டு சூட்டிங்கிற்கு பாரீன் போவது அவசியமா? உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

12 comments:

ரொம்ப கஷ்டமான கேள்வி சார் ...
ரூம் போட்டு யோசிச்சு அப்புறம் சொல்றேன் பாஸ் ...

 

ஒரு விஷயம் தெரியுமா!! இப்பல்லாம் ஒரு பாட்டிற்கு செட் போட்டு எடுக்கும் செலவைவிட வெளிநாடு சென்று எடுப்பது செலவு கம்மி. அதிகப்படியான ஸ்டுடியோ வாடகை,செட் பிராப்பர்ட்டி உருவாக்கத் தேவையான செலவு, பின்னர் நம்ம ஊரில்தானே எடுக்கிறோம் என்ற அசால்ட்டில் ஃபெர்பெக்‌ஷன் பாக்குறேன்னு நாளைக் கடத்தி அதற்கு ஆகும் ஸ்டுடியோ,கேமரா எக்ஸ்ட்ரா வாடகை, வீணாகும் ரோல் செலவு, தொழிலாளர்களுக்கு தர வேண்டிய அதிக பேட்டா இதையெல்லாம் கணக்கு பண்ணும்போது வெளிநாட்டில் எடுத்துவிடுவது மிச்சம். காரணம் ஒரே ஒரு கேமரா அசிஸ்டெண்ட் மற்றும் ஒரே ஒரு டான்ஸ் மாஸ்டர் அசிஸ்டெண்ட் மட்டுமே வெளிநாட்டு ஷூட்டிங்க்கு அலவ்ட். அப்புறம் ஒரு பாடல் காட்சியை மூன்றே நாளில் எடுக்க வேண்டும் என்ற சங்கத்தின் கட்டாய விதி இந்த காரணங்களால் வெளிநாட்டில் பாட்டு எடுப்பது செலவு கம்மியான விஷயம் :)

 

வரலைன்னா நாங்கெல்லாம் எப்படி நடிகர் நடிகையரைப் பார்க்கறது?

எங்கூருக்கும் அன்னியச்செலாவணி இவுங்க மூலம் வருதே.

வந்துட்டுப் போகட்டும். கதைக்குத் தேவையான கவர்ச்சியை வேற காட்டணுமே

 

welcome. Naan varaverkiran.

 

Very good interview.

 

வரலைன்னா நாங்கெல்லாம் எப்படி நடிகர் நடிகையரைப் பார்க்கறது?

 

போன வாரம் காப்பி வித் அனு பாருங்க, புரியும். வெளிநாடு போனா கால்ஷீட் பிரச்சினையும் கிடையாது. போவ வேலை முடிச்சுட்டு வந்துரலாம். இங்கன்னா பல இடர்பாடுகள் இருக்கும்

 

வெளிநாட்டுக்கு ‌சூட்டிங் எடுக்க போறது தப்பு இல்லன்னு நானும் சொல்லுறேன்.

 

ரொம்ப முக்கியம்..............................

 

பாரீன் பாட்டு... கிளுகிளுப்பு டான்சுன்னு கலக்குங்க தலைவா.

 

nice service
soft skill training soft skill training

 

Post a Comment